ட்ரெண்டிங்

சேலம் காய்கறி வியாபாரிகள் கவலை கனமழையால் விற்பனை பாதிப்பு !

 

சேலத்தில் விடிய விடிய கனமழை: காய்கறி சந்தைகள் வெறிச்சோடி, வியாபாரிகள் வேதனை

சேலம் மாநகரில் அதிகாலை முதல் இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பழைய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி, ஏற்காடு அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் தினசரி செயல்பட்டு வரும் காய்கறி சந்தைகள், மழையின் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டன. விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்த கீரைகள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க ஆட்கள் வராததால் தேங்கிக் கிடக்கின்றன.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் வருகை குறைந்துள்ளதால் வியாபாரிகளும் விற்பனை இன்றி காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொண்டு வந்த பொருட்களை முழுமையாக விற்பனை செய்ய முடியாமல் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.