சேலம் மாநகர காவல் ஆணையாளராக பிரவீன்குமார் அபிநவ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் கொண்டலாம்பட்டி பகுதியின் அ.தி.மு.க. செயலாளர் சண்முகம், மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சூழலில், சேலம் மாநகர காவல் ஆணையாளராக இருந்த விஜயகுமாரியை தமிழ்நாடு ஆயுதப்படை ஐ.ஜியாக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டிருந்தார். அதேபோல், சேலம் மாநகர காவல் ஆணையாளராக பிரவீன்குமார் அபிநவை நியமித்து உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்த பிரவீன்குமார் அபிநவுக்கு காவல் ஆணையாளர், துணை ஆணையாளர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர். அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.


-SXgDfGgJfO.jpg)