ட்ரெண்டிங்

சேலத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை; திறந்தவெளி மைதானங்களில் திரண்ட இஸ்லாமியர்கள் !

 

சேலலத்தில் இஸ்லாமியர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

இதையொட்டி சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா மைதானங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள அம்மாபாளையம் மஸ்ஜித் அருகிலுள்ள திறந்தவெளி மைதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின்னர் உலக நன்மை, சமாதானம் மற்றும் சகோதரத்துவம் நிலைக்க வேண்டி பிரார்த்தனை செய்தனர்.அதேபோல் சேலம் கோட்டை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். தொழுகை நிறைவடைந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.மேலும் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா மைதானங்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

இஸ்லாமியர்கள் குடும்பத்தினருடன் திரளாக கலந்து கொண்டு ஈகை திருநாளை ஆனந்தமாக கொண்டாடினர்