ட்ரெண்டிங்

சேலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 !

 

சேலம் மாவட்டத்தில் “மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027” பணிகளை மேற்கொள்வது தொடர்பான முதல் நாள் பயிற்சி வகுப்பு இன்று (26.05.2026) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

இப்பயிற்சிக்கு மாநகராட்சி ஆணையாளர்,லலித் ஆதித்யநீலம் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை திறம்பட செயல்படுத்துவதற்காக பல்வேறு துறை அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புகள் மே 26, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்திலிருந்து வந்துள்ள அலுவலர்கள் பயிற்சியை வழங்கினர்.

இந்த முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

முதல் கட்டமாக வீட்டு பட்டியல் தயாரித்தல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது.

பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர்,ரவிக்குமார், மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் சென்னை இணை இயக்குநர் வி.கே.சுபா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பொறுப்பு அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பயிற்சியில் பங்கேற்றனர்.