ட்ரெண்டிங்

எம்.ஜி.ஆர் பிறந்தநாள்- அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்!


அ.தி.மு.க.வின் நிறுவனரும், முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆரின் 107- வது பிறந்தநாளையொட்டி, கட்சியினராலும், அவரது ரசிகர்களாலும் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், சேலம் மாநகரில் அமைந்துள்ள அண்ணா பூங்கா அருகே உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் திருவுருவச் சிலைக்கு அ.தி.மு.க.வின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாஜலம் தலைமையிலான அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதைச் செலுத்தினர். 

இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க.வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்திவேல், செல்வராஜ், ரவிச்சந்திரன், சேலம் தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், சேலம் மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் என 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

அதேபோல், சேலம் மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினரும், எம்.ஜி.ஆரின் ரசிகர்களும், எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினர். அத்துடன், பொதுமக்களுக்கு இனிப்புகளையும், அன்னதானம் வழங்கிக் கொண்டாடி வருகின்றனர்.