ட்ரெண்டிங்

சேலம் கலைஞர்களுக்கு வாய்ப்பு: ஓவிய - சிற்பக் கலைக் காட்சி அறிவிப்பு !

 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்களிடமிருந்து ஓவிய - சிற்பக் கலைக் காட்சியில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறையின் மூலம் ஒவ்வொரு மண்டலத்திலும் ஓவிய - சிற்பக் கலைக் காட்சிகள் நடத்தப்பட உள்ளன. 

அதன்படி, சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மையம் சார்பில் இந்த கலைக் காட்சி நடத்தப்படுகிறது. ஓவியம் மற்றும் சிற்பக்கலையில் ஈடுபட்டு வரும் கலைஞர்களின் சிறந்த படைப்புகள் காட்சிப்படுத்தப்படுவதுடன், வல்லுநர் குழுவினரால் தேர்வு செய்யப்படும் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

இதில் தேர்வு செய்யப்படும் 7 கலைஞர்களுக்கு,முதல் பரிசு – ரூ.5,000 இரண்டாம் பரிசு–ரூ.3,000 மூன்றாம் பரிசு – ரூ.2,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்பும் கலைஞர்கள் தங்களது சுயவிவரக் குறிப்புடன் ஓவியம் மற்றும் சிற்பப் படைப்புகளை 15.06.2026க்குள் மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டு மையம், திருப்பதிகவுண்டனூர் சாலை, ஆவின் பால் பண்ணை எதிரில், அய்யம்பெருமாம்பட்டி அஞ்சல், சேலம் – 636302 என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு 0427-2386197 மற்றும் 99444 57244 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது