சென்னையில் தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து நடைமுறைகள் முடியும் வரை இனி எந்தப் படத்திலும் நடிக்கப் போவதில்லை என்று நடிகர் ரவி மோகன் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த தனிப்பட்ட பேட்டியில், “இத்தனை நாள் அமைதியாக இருந்ததற்காக நான் முட்டாளாக உணர்கிறேன். ரவி மோகன் என்றால் சாதுவானவர் என்கிறார்கள். ஆனால் சாது மிரண்டால் காடு பொல்லாது” என்று கூறினார்.
மேலும், “23 ஆண்டுகளாக என் குடும்பத்திற்காக இரவு பகலாக உழைத்தேன். நான் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்கள். ஆனால் இப்போது என்னால் மனநிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. விவாகரத்து கிடைக்கும் வரை என்னுடைய படங்கள் வெளியாகாது” என்றார்.
தனது குடும்ப வாழ்க்கை குறித்து பேசிய அவர், “14 ஆண்டுகளாக பல விஷயங்களை பொறுத்துக் கொண்டேன். என் குழந்தைகளை கூட பார்க்க முடியவில்லை. அவர்களுடன் பேசவும் அனுமதிக்கவில்லை” என்று வேதனை தெரிவித்தார்.
அதேபோல், தனது நெருங்கிய தோழி கெனிஷா குறித்து பேசிய ரவி மோகன், “ஒரு பெண்ணை சைபர் புல்லிங் செய்து என் வாழ்க்கையிலிருந்து விரட்டிவிட்டார்கள். என்னை மனிதனாக புரிந்துகொண்டவர் கெனிஷா தான்” என கூறினார்.
இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


