ட்ரெண்டிங்

கோடைக்கால பயிற்சி... கொரியன் மொழியை கற்க ஓர் அரிய வாய்ப்பு! 

கொரியன் மொழி, கொரிய நாட்டு கலாச்சாரம் மற்றும் உணவுகள் குறித்த நிகழ்ச்சி, சேலம் ஜங்சன் செல்லும் சாலையில் உள்ள சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் வரும் ஏப்ரல் 20- ஆம் தேதி தொடங்கி ஜூன் 01- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. குறிப்பாக, சோனா கல்லூரியில் கோடைக்கால பயிற்சியாக கொரியன் மொழி பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. 

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் கொரியன் மொழி மற்றும் மற்ற நிகழ்ச்சிகளில் தென் கொரியா நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் யோஹன் ஜியோன் கலந்து கொண்டு பயிற்சி வழங்கவிருக்கிறார். 

அத்துடன், கொரிய பாப் பாடல்கள், கொரிய நடனம், கொரிய நாடகங்களும் நடைபெறவுள்ளன. அத்துடன், தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனங்களும் கலந்து கொள்ளவுள்ளனர். 

இதில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி வரை https://forms.gle/McJzWhhAjGPBFmpy9 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரியன் மொழியை கற்பதன் மூலம் தென் கொரியா நாட்டிற்கு சென்று ஹூண்டாய், சாம்சங், கியா, எல்ஜி உள்ளிட்ட கொரிய நிறுவனங்களில் பணிபுரிவதற்கும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.