சேலம் மாவட்டத்தில் பேருந்து நிலையம் மற்றும் கல்வி நிலையம் அருகே இருந்த 10 டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டன...
முதல்வர் ஜோசப் விஜயின் உத்தரவை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை...
தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பல நிலையங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் 717 கடைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில், சேலம் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் கடைகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த ஒரு டாஸ்மாக் கடையையும், புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த நான்கு அரசு மதுபான கடையையும் , கொண்டலாம்பட்டி , மற்றும் ஆத்தூர் ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய கடைகள் என பத்திற்கு மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் தற்போது மூடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்கும், பொதுமக்கள் நலனையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் சுமார் 20 கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்..



