சேலம் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க சுமார் ஐம்பதாயிரம் (50,000) லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் மார்கழி மாத ஏகாதசி தினத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் சேலம் பட்டை கோவில் அருகே உள்ள பிரசன்ன வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களுக்காக லட்டு தயார் செய்து வழங்க்கபடுகின்றது..அதன் அடிப்படையில் இந்த ஆண்டு வருகின்ற செவ்வாய்க்கிழமை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது.
இதனையொட்டி திருப்பாவை நண்பர்கள் குழு சார்பில் லட்டு தயார் செய்து பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு 50,000 லட்டு தயாரிப்பு பணி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுமார் 50 ஆயிரம் லட்டுக்களை தயார் செய்து வருகின்றனர்..

-RTfZdHquhm.jpeg )
