ட்ரெண்டிங்

பயணிகளின் வசதிக்காக ஏற்காடு டெய்லி எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம் !

 

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ஈரோடு – சென்னை சென்ட்ரல் யேர்காடு டெய்லி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 22650) ரயிலின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்த மாற்றியமைக்கப்பட்ட புதிய நேர அட்டவணை 01 ஜனவரி 2026 முதல் அமலுக்கு வருகிறது.

புதிய நேர அட்டவணைப்படி, ரயில் ஈரோடு சந்திப்பில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு, சேலம் சந்திப்பை இரவு 10.42 – 10.45 மணிக்கு கடந்து, மொரப்பூர் நிலையத்தை இரவு 11.39 – 11.40 மணிக்கு அடையும்.இதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை சந்திப்பை நள்ளிரவு 12.53 – 12.55 மணிக்கு அடையும் இந்த ரயில், காட்பாடி நிலையத்தை அதிகாலை 2.03 – 2.05 மணிக்கு கடந்து, இறுதியாக சென்னை சென்ட்ரல் நிலையத்தை அதிகாலை 4.25 மணிக்கு அடையும்.

இந்த நேர மாற்றம் மூலம் பயணிகளுக்கு மேலும் வசதி ஏற்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.