வரும் ஜூலை 21- ஆம் தேதி அன்று கோவையில் இருந்து சேலம் வழியாக பீகார் மாநிலம், டானாபூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜூலை 21- ஆம் தேதி அன்று இரவு 11.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 01.47 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தை வந்தடையும். 3 நிமிடங்களுக்கு பிறகு புறப்படும் ரயில், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், குண்டூர், நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்திரி, பாட்னா, கயா, சாம்பல்பூர் வழியாக வரும் ஜூலை 24- ஆம் தேதி டானாபூர் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.


