ட்ரெண்டிங்

தங்க நகையைத் திருடிய விற்பனையாளர் கைது!

தங்க நகையைத் திருடிய விற்பனையாளர் கைது! 

சேலம் மாவட்டம், ஜாகீர் அம்மாப்பாளையத்தில் உள்ள சிவாஜி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). இவர் சேலம் மத்திய பேருந்து நிலையம் செல்லும் வழியில் உள்ள டிவிஎஸ் பேருந்து நிறுத்தத்தில் புதிதாக திறக்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் தங்க நகைகள் என அனைத்தும் அடங்கிய மிகப்பெரிய கடையில் கார்த்திக், கடந்த சில மாதங்களாக விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

நாள்தோறும் கடைகளை மூடும் போது, தங்க நகைகளின் எண்ணிக்கையை ஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில், நகைக்கடையில் நகைகளை ஆய்வு செய்த போது, 10 கிராம் தங்க நகை இல்லாதது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, கடையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களிடமும், கடை நிர்வாகம் சார்பில் விசாரணை நடைபெற்றது. 

அத்துடன், கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில், நகை விற்பனையாளர் கார்த்தி, 10 கிராம் தங்க நகையைத் திருடியதைக் கண்டுப்பிடித்தனர். அதைத் தொடர்ந்து, அவரிடம் விசாரித்த கடையின் உரிமையாளர்கள், திருடிய நகையை அடகு வைத்திருப்பதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். 

அதன் தொடர்ச்சியாக, பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் கடையின் மேலாளர் புகார் அளித்த நிலையில், கார்த்திக் மீது வழக்குப்பதிவுச் செய்து அவரை கைது செய்தது காவல்துறை.