ட்ரெண்டிங்

சேலத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் !

 

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்19ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு ..

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், வேலைவாய்ப் பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில்,ஒவ்வொரு மாதத்திலும் 3வது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

அதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் வரும் 19ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.இம்முகாமில் உற்பத்தி,தகவல் தொடர்பு,தொழில்நுட்பம், ஜவுளி,வங்கி,சேவைகள்,காப்பீடு, மருத்துவம்,கட்டுமானம்,நிதி நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு,தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் கள்,பட்டம், பட்டமேற்ப டிப்பு,ஐடிஐ,டிப்ளமோ,பொறியியல்,செவிலியர்,ஆசிரியர்,சட்டம்,விவசாயம் உள்ளிட்ட அனைத்து விதமான கல்வி தகுதியை கொண்டவர்கள்.இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். 

காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.இது குறித்த மேலும் விவரங்களுக்கு 97888-80929 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்,பெண்கள்,மாற்றுத் திறனாளிகள் அதிகளவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வேலைவாய்ப்புத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.