ட்ரெண்டிங்

தி.மு.க. மாநாடு- வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!

 

வரும் ஜனவரி 21- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக, தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க.வின் இளைஞரணியின் மாநிலச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நாளை (ஜன.20) சேலம் மாவட்டத்துக்கு வருகைத் தரவுள்ள நிலையில், சேலம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

தி.மு.க. மாநாடு காரணமாக, சேலம் ஆத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

உளுந்தூர்பேட்டை வழியாக சேலம், கோயம்புத்தூர், கேரளா செல்லும் வாகனங்கள் உளுந்தூர்பேட்டையிலிருந்து பெரம்பலூர், துறையூர், முசிறி, நாமக்கல், வழியாக சேலத்திற்கும் மற்றும் உளுந்தூர்பேட்டையிலிருந்து பெரம்பலூர், துறையூர், முசிறி, குளித்தலை, கரூர் வழியாக கோயம்புத்தூர், கேரளா செல்லலாம்.

 

கோவை மார்க்கமிருந்து சேலம் வழியாக சென்னை அல்லது கர்நாடகா செல்லும் வாகனங்கள் ஈரோடு மாவட்டம் லட்சுமி நகர் (பவானி பைபாஸ்), பவானி, அம்மாபேட்டை, மேட்டூர். மேச்சேரி, தொப்பூர், தர்மபுரி வழியாக செல்லலாம்.

 

தர்மபுரி மார்க்கமிருந்து சேலம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் தொப்பூர் பிரிவு. மேச்சேரி, ஓமலூர், தாரமங்கலம், கொங்கணாபுரம், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி, கரூர் வழியாகவும், தர்மபுரி மார்க்கமிருந்து ஈரோடு/கோவை/கேரளா செல்லும் வாகனங்கள் தொப்பூர் பிரிவு, மேச்சேரி, மேட்டூர், அம்மாபேட்டை, பவானி, பெருந்துறை வழியாக செல்லலாம்.

 

தென் மாவட்டங்களிலிருந்து சேலம்- தர்மபுரி- கிருஷ்ணகிரி- கர்நாடகா நாமக்கல் வழியாக செல்லும் வாகனங்கள் நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி, கொங்கணாபுரம். தாரமங்கலம், ஓமலூர், மேச்சேரி. தொப்பூர் வழியாக செல்லலாம். வாணியம்பாடி, திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர் வழியாக சேலம் வரும் வாகனங்கள் வாணியம்பாடியிலிருந்து நாட்றம்பள்ளி, பருகூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக செல்லலாம் என்று போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.