ட்ரெண்டிங்

நாளை இந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது- மின்சார வாரியம் அறிவிப்பு

மின்சார வாரியத்தின் துணைமின் நிலையங்களில் மாதந்தோறும் ஒருநாள் மட்டும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அப்போது குறிப்பிட்ட நேரங்களுக்கு, குறிப்பிட்டப் பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இது தொடர்பான அறிவிப்பை சம்மந்தப்பட்ட துணைமின் நிலையங்களின் செயற்பொறியாளர்கள் செய்தித்தாள் மூலம் அறிவிப்பை வெளியிடுவர். பராமரிப்புப் பணிகளின் நோக்கம், தங்கு தடையின்றி பொதுமக்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மாதம் முழுக்க மின்சாரம் விநியோகிப்பதே. 


அந்த வகையில், சேலம் மாவட்டம், தாரமங்கலம் துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், தாரமங்கலம், காடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திராம்பட்டி, பவளத்தானூர், அத்திக்காட்டத்தானூர், பெரியாம்பட்டி, எம்.செட்டிப்பட்டி, துட்டம்பட்டி, பாப்பம்பாடி, சின்னப்பம்பட்டி, சமுத்திரம், பூக்கார வட்டம், கருக்குப்பட்டி, வெள்ளாளபுரம், வெள்ளைக்கல்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (ஜூலை 27) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.