தமிழ்நாடு முழுவதும் 621 காவல் உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இன்று (ஆகஸ்ட் 26) பொதுப்பிரிவினருக்கு தேர்வு நடைபெற்ற நிலையில், நாளை (ஆகஸ்ட் 27) காவல்துறை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது. காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வுக்கு மொத்தம் 1,86,610 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த ஏழு தேர்வு மையங்களில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு மொத்தம் 7,175 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 5,892 பேர் மட்டும் தேர்வு எழுதினர். மற்ற 1,283 பேர் தேர்வை எழுதவில்லை.
சேலம் காவல்துறை சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி இ.கா.ப., தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அத்துடன், தேர்வர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் காவல்துறையினரிடம் கேட்டறிந்தார்.



-hcTFAGMRGb.jpg)