ட்ரெண்டிங்

சேலம்-காவல்துறை கடும் நடவடிக்கை – 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது !

 

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவு..

சேலம் எருமாப்பாளையம் ஆலமரத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (21),களரம்பட்டி நேதாஜி தெருவை சேர்ந்த லோகேஷ் (20),ஸ்ரீதர் (எ) ஜூப்ளி (20) இவர்கள் 3 பேரும் கடந்த மாதம் 7ம் தேதி,மாயக்கண்ணன் என்பவரை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்து கொண்டு சென்றதுடன் காயத்தையும் ஏற்படுத்தினர்.

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த கிச்சிப்பாளையம் போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள்3 பேர் மீதும் அடிதடி வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. தொடர்ந்து குற்றச்செயல் களில் ஈடுபட்டு வரும் பிரதாப்,லோகேஷ், ஸ்ரீதர்(எ) ஜூப்ளி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கிச்சிப்பாளையம் இன்ஸ்பெக்டர் குமார்,துணை கமிஷனர் கேல்கர் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரிக்கு பரிந்துரை செய்தனர்.இதனை ஏற்றுக்கொண்ட கமிஷனர், வாலிபர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.அதன்படி அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.