ட்ரெண்டிங்

புது மாப்பிள்ளை மாயம் உறவினர்கள் அதிர்ச்சி !!!

சேலத்தில் திருமணமான ஒரே நாளில் புதுமாப்பிள்ளை மாயமான சம்பவம் உறவினர்கள் அதிர்ச்சி..

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவர் கோழித்தீவனம் மற்றும் மாட்டு தீவனம் வியாபாரம் செய்து வருகிறார்.இவருக்கும்,திருச்சியைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கும் கடந்த 1ம்தேதி (திங்கள்) சேலத்தில் திருமணம் நடைபெற்றது.இந்த நிலையில் 2ம்தேதி (செவ் வாய்) காலை, வீட்டில் இருந்த கார்த்தி, அவரது தாயிடம் ஏடிஎம்மில் பணம் எடுத்து வருவதாக கூறி விட்டு வெளியே சென்றார்.அதன் பின்னர்,வெகு நேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மற்றும் புது மனைவி அவரை தேடினர்.அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

மேலும்அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.இதுபற்றி கிச்சிப்பாளை யம் போலீசில் குடும்பத் தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக் டர் குமார் வழக்குப்பதிவு செய்து, காதல் விவகாரத் தில் கார்த்திக் எங்கேனும் சென்று விட்டாரா,அல்லது அவருக்கு பெண்ணை பிடிக்கவில்லையா,அவர் செல்வதற்கு முன்பு யாரிடம் கடைசியாகபேசினார்,என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.