கார்த்திகை மாத துன்பங்கள் தீர்க்கும் அமாவாசை முன்னோர் முன்னோர் வழிபாட்டின் முக்கியத்துவம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் :-
இந்து மரபில் ஒவ்வொரு திதியும் தனித்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, அமாவாசை நாள் முன்னோர்களை வணங்குவதற்கான மிகச் சிறந்த திதியாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் விரதம் இருந்து, பித்ரு வழிபாடு செய்தால் செல்வம்,ஆரோக்கியம்,குடும்ப நலம் போன்ற பல நன்மைகள் பெறலாம் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில்,கார்த்திகை மாத அமாவாசை இந்தாண்டு நவம்பர் 19ம் தேதி வருகிறது. அன்றைய நாள் காலை 10.28 மணிக்கு அமாவாசை திதி தொடங்கி, நவம்பர் 20ம் தேதி மதியம் 12.31 மணிக்கு நிறைவடைகிறது.திதி தாமதமாக தொடங்குவதால்,முன்னோர் திதி,தர்ப்பணம் போன்றவை நவம்பர் 20ம் தேதி வியாழக்கிழமை காலை செய்யலாம் என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
அமாவாசை நாளில் அருகிலுள்ள நீர்நிலைகளில் நீராடுவது சிறப்பானதாகும். நீர்நிலைக்கு செல்ல முடியாதவர்கள் கங்கை தீர்த்தம் கலந்து நீராடலாம். குளித்த பின் “நமோ நாராயணா” மந்திரத்தை ஜெபித்து சூரிய பகவானுக்கு நீர்ப் படையல் செய்வதும் பரிந்துரைக்கப்படுகிறது.
கார்த்திகை மாதத்தை ஒளியின் மாதம் என்று அழைப்பதால், மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமித்த பின் மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. வீட்டின் முகப்பு வாயில் அல்லது துளசி செடியின் அருகில் விளக்கு ஏற்றுவது பெருமாள் அருள் சேரவும், சனி பிரச்சனைகள் நீங்கவும் உதவும் என ஐதீகம் கூறுகிறது.
மேலும், கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் அரச மர வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது. அமாவாசை நாளில் அரச மர அடியில் இரண்டு அகல் விளக்குகளில் தீபமேற்றி “ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே” மந்திரம் ஜெபித்து சுற்றிவருவது பித்ரு தோஷ நிவாரணம் பெற உதவும் என நம்பப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கார்த்திகை அமாவாசை புதன்கிழமையன்று வருவதால், அன்றைய நாளில் மாலை நேரத்தில் பெருமாளை வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. துளசி இலை, பஞ்சாமிர்தம் வைத்து நைவேத்யம் செய்வது குடும்ப நலனுக்கும் செல்வ வளத்திற்கும் சிறந்ததாகும்.
மாலை நேரத்தில் மாவிளக்கு ஏற்றி, அதில் நல்லெண்ணெய் அல்லது பசுநெய் சேர்த்து மகாலட்சுமியை நினைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்றும், இந்நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் மிகுந்த பலன்கள் தரும் என்றும் நம்பப்படுகிறது.
கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, இவ்வாறு முன்னோர் வழிபாடு மற்றும் தீப புனிதம் மூலம் குடும்பத்திற்கு வளமும் அமைதியும் பெருகும் என பக்தர்கள் தர்ம சாஸ்திரங்களை மேற்கோள்காட்டி நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

-Lobp4Iyzur.jpg )

-hcTFAGMRGb.jpg)