ட்ரெண்டிங்

தொடங்கியது ஐயப்ப சீசன் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு !!!

 

சேலம்,சபரிமலை ஐயப்ப சீசனை முன்னிட்டு,காக்கிநாடாவில் இருந்து சேலம் வழியாக கோட்டயத்துக்கும் தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து சேலம் வழியாக கொல்லத்திற்கும் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் காக்கிநா டாவில் இருந்து நேற்று மதியம்,1:00 மணிக்கு கோட்டயத்துக்கு புறப்பட்ட ரயில் இரவு,7:12 மணிக்கு சேலம்,8:10 மணிக்கு ஈரோடு செல்கிறது.இன்று மாலை,5:30 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும்.வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் டிச.,1,8,15,22,29 மற்றும் 2026 ஜன.,5,12,19 ஆகிய தேதி களில் இயக்கப்படவுள்ளது.

கோட்டயத்தில் இருந்து காக்கிநாடாவுக்கு சிறப்பு ரயில் இன்று (நவ., 18) இரவு 8:30 மணிக்கு கிளம்பி, ஈரோடுக்கு மறுநாள் காலை 5:15 மணி,சேலத்துக்கு,7:10 மணிக்கு வருகிறது.இரவு, 11:00 மணிக்கு காக்கிநாடாவை சென்றடையும். வாரம் தோறும் செவ்வாய்கிழமைகளில் இந்த சிறப்பு ரயில் டிச.,2,9,16,23,30 மற்றும் 2026 ஜன.,6,13,20 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளது.

தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இன்று (நவ., 18) காலை, 11:20 மணிக்கு புறப்பட்டு சேலம் வழியாக கொல்லத்துக்கு செல்லும் சிறப்பு வாராந்திர ரயில் நாளை காலை 8:30 மணிக்கு சேலம், 9:35க்கு ஈரோடு வருகிறது. இரவு 11:00 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது. வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரயில் 2026 ஜன.,13 வரைஇயக்கப்படவுள்ளது.

இதே போல் நவ., 20 மதியம் 2:30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் ஈரோடுக்கு மதியம் 1:15 மணிக்கும், சேலத்துக்கு 2.22 மணிக்கும் வருகிறது.சார்லபள்ளிக்கு 22ம் தேதி மதியம் 12:30க்கு சென்றடைகிறது. வியாழக்கிழமைகளில் 2026 ஜன.,15 வரை இயக்கப்படவுள்ளதாக,சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.