சேலம் மாவட்டம் இளம்பிள்ளை,காந்தி நகரை சேர்ந்த ஜவுளி வியாபாரி நாகராஜனிடம் ஆன்லைன் மூலம் ரூ.8 லட்சம் மோசடி..
சேலம் இளம்பிள்ளை,காந்திநகரைச் சேர்ந்த நாகராஜன் பவர் அதே பகுதியில் ஆன்லைன் மூலம் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.கடந்த பிப்ரவரி மாதம் கன்னியாகுமரி சேர்ந்த இருவர் ஆன்லைன் மூலம் அவரை தொடர்பு கொண்டு தங்களுடைய ஜவுளி ரகங்களை ஆன்லைன் பார்த்தோம் எனக்கு கூறி ஜவுளி ரகங்களை ஆர்டர் செய்து புடவை,சுடிதார் வாங்கி வந்துள்ளனர்.கூகுள் பென் மூலம் பணம் அனுப்பிவிட்டு அதற்கான அறிக்கை ஸ்கிரீன்ஷாட் படத்தை நாகராஜனுக்கு அனுப்பி ஜவுளிகளை வாங்கி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜவுளி ரகங்களை வாங்கிக் கொண்டு ரூ.8,160 க்காண ஸ்க்ரீன்ஷாட்டை நாகராஜனுக்கு அனுப்பினர்.அப்போது 1.ரூபாய் மட்டுமே வரவு வந்தது என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜ் சந்தேகப்பட்டு அவர்களின் முந்தைய கணக்குகளை சரிபார்த்த போது,அவர்கள் வாங்கும் ஜவுளி ரகங்களுக்கு ஒவ்வொரு முறையும் 1.ரூபாய் அனுப்பியுள்ளதாக கணக்கில் காட்டியுள்ளது.
இதனால் அவர்கள் அனுப்பிய ஸ்கிரீன்ஷாட் அனைத்தையும் சோதனை செய்தபோது அந்த நாள் நேரத்தில் மட்டும் ஒரு ரூபாய் அனுப்பிவிட்டு. ஸ்கிரீன் ஷாட்டை எடிட் செய்து அனுப்பி மோசடி செய்தது தெரியவந்தது.இதுவரை ரூ.8 லட்சம் ரூபாய் வரை அவர்கள் ஜவுளி வாங்கி ஏமாற்றியதும்,தெரியவந்தது. இதனால் அவர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

-1a8SQQHUG2.jpeg )

-hcTFAGMRGb.jpg)