சேலம் ஒய் எம் சி ஏ நடத்திய குழந்தைகள் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் பாலசுப்ரமணியம் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
குழந்தைகள் தினம் குழந்தைகளுடைய விழாவினை பேச்சாற்றலை சிறப்பிக்கும் நோக்கத்துடன்,பள்ளிப்பருவத்திலேயே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சுப்போட்டி சேலம் ஒய்.எம்.சி.ஏ. சார்பாக ஒய் எம் சி ஏ ஹாலில் நேற்று நடந்தது.
இப்போட்டியானது 6 ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படிக்கின்ற மாணவ மாணவியர் ஜூனியர் பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கின்ற மாணவ மாணவியர் சீனியர் பிரிவாகவும்,
11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவ மாணவியர் சூப்பர் சீனியர் பிரிவாகவும் பிரிக்கப்பட்டு,மூன்று பிரிவினருக்கும் ஆங்கிலம் மற்றும் தமிழ் பிரிவுகளில் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடங்களைப் பிடிப்பவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் அதிக புள்ளிகளைப் பெற்ற சேலம் குகை நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு ஒட்டுமொத்த,கேடயமும் வழங்கப்பட்டது.சேலம் மாவட்ட நூலக அலுவலர் பாலசுப்பிரமணியம்,முதல் நிலை நூலகர் திருமதி.சித்ராபூர்ணம்,முதல்நிலை நூலகர் ஆகியோர்கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பரிசு பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில்,டாக்டர்.கரோலின் எபி ,சேலம் ஒய் எம் சி ஏ.நிர்வாகி குணசீலன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் நிகழ்சிக்கான ஏற்பாடுகளை பொதுச்செயலாளர் ஜோஸ் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

-9xBSTdZhX4.jpeg )
-SXgDfGgJfO.jpg)