சேலத்தில் இருந்து கேரளாவுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான போதை பொருள் கடத்த முயன்ற கேரளாவைச் சேர்ந்த புதின் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் சூரமங்கலம் போலீசார்,ரயில்வே பாதுகாப்பு கடை போலீசார் இணைந்து நேற்று காலை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 4-வது நடைமேடை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது ஒரு வாலிபர் சம்பந்தமில்லாமல் கையில் நின்று இருந்தார் சந்தேகத்தின் பெயரில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார்.
அப்போது அவர் கையில் வைத்திருந்த,பையை சோதனை செய்தபோது,இரண்டு பிளாஸ்டிக் கவரில் ஒவ்வொரு கிலோவாக ,ஹாஷிஸ்,எனும் போதை பொருள் இருப்பதை கண்டறிந்தனர்.அவரை காவல் நிலைய அழைத்து சென்று விசாரித்ததில் அவர் கேரள மாநிலம் எர்ணாகுளம், திருக்காரா வடக்கு பகுதியை சேர்ந்த புதீன்,என்பதும் அவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து போதை பொருளை வாங்கி,கேரள மாநிலத்துக்கு கடத்த மன்றதும் தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.அதன் மதிப்பு 25 லட்ச ரூபாய் என காவல்துறையினர் தெரிவித்தனர்.


-SXgDfGgJfO.jpg)