சேலம்.(நவ.14)
சேலம்,சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாணவர்களின் தொழில் முனைவுத் திறன்களை வளர்க்கும் நோக்கில் இளம் தொழில் முனைவோர் சந்தை என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் இயக்குனர் டாக்டர் வி. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,முதல்வர் திருமதி இ.ஜெ.கவிதா முன்னிலை வகித்தார். இவ்விழாவை சிறப்பாக நடத்த வாய்ப்பு வழங்கிய சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.சொ.வள்ளியப்பா,திருமதி சீதா வள்ளியப்பா,துணை தலைவர்கள் திரு.சொக்கு வள்ளியப்பா,திரு.தியாகு வள்ளியப்பா ஆகியோருக்கு முதல்வர் நன்றியை தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினராக சேலம் பிரணவ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் திருமதி சீ.சம்யுக்தா கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார்.மாணவர்கள் தாங்களே உருவாக்கிய கைவினைப் பொருட்கள், உணவுப் பொருட்கள்,அலங்காரப் பொருட்கள்,புதுமையான தயாரிப்புகள் போன்றவற்றை விற்பனைக்கு வைத்து தங்களது வணிகத் திறன்களை வெளிப்படுத்தினர்.
இத்தகைய நிகழ்ச்சிகள் குழந்தைகளின் நம்பிக்கை,குழுபண்பு,தொழில் முனைவுத் திறனை மேம்படுத்துகின்றன என இயக்குனர் டாக்டர் வி. கார்த்திகேயன் மற்றும் முதல்வர் திருமதி இ.ஜெ. கவிதா தெரிவித்தனர்.
விழாவில் ஆசிரியர்கள்,பெற்றோர், மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குழந்தைகள் தினத்தை உற்சாகமாகக் கொண்டாடினர்.

--(7)-79RNDpdNfO.jpg )
