நடப்பு 2023-2024-ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் முதலியவற்றை செலுத்த ஏதுவாக பொதுமக்கள் வசதி கருதி பிப்.25-ம் தேதியன்று சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெற உள்ளதாக சேலம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளதாவது, சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு 1-ல் உள்ள காமநாயக்கன்பட்டி மேல்நிலைப்பள்ளி, வார்டு 3-ல் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி குரங்குச்சாவடி, வார்டு 25-ல் உள்ள பள்ளப்பட்டி துரைசாமி நகர், குழந்தைகள் நல வாழ்வு மையம், வார்டு 26-ல் உள்ள பெரிய கிணறு தெரு. சாமிநாதபுரம் துப்பரவு ஆய்வாளர் அலுவலகம், வார்டு 28-ல் உள்ள பால்மார்க்கெட் துப்பரவு ஆய்வளர் அலுவலகம்.
அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட வார்டு 4-ல் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகம் திரௌபதி அம்மன் கோவில் அருகில், வார்டு 6-ல் உள்ள சின்னகொல்லப்பட்டி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,வார்டு 12-ல் உள்ள மணக்காடு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வார்டு 15-ல் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகம் சீரங்கபாளையம், வார்டு 31-ல் உள்ள சன்னதி தெரு, இந்தியன் வங்கி அருகில், அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வார்டு 35-ல் உள்ள நகரவை துவக்கப்பள்ளி, ஆதி செல்வ கணபதி தெரு, வார்டு 36-ல் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தாதம்பட்டி, வார்டு 37-ல் ஊராட்சி ஒன்றியம் தொடக்கப்பள்ளி, காமராஜ் நகர் காலனி,வார்டு 41-ல் உள்ள பாவடி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வார்டு 44-ல் உள்ள குப்பைமேடு நடுநிலைப்பள்ளி வளாகம், கடம்பூர் முனியப்பன் கோவில் தெரு, கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட வார்டு 48-ல் உள்ள பத்மாவதி அப்பர்ட்மெண்ட், நெய்மண்டி அருணாசலம் தெரு-2, வார்டு 49-ல் உள்ள முருகன் கோவில் கந்தப்பா காலனி, வார்டு 54-ல் சுப்பிரமணிய சுவாமி கோவில், தர்மலிங்கம் தெரு-1, வார்டு 55-ல் உள்ள மேட்டூத் தெரு நடுநிலைப்பள்ளி,வார்டு 60-ல் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி மாரியம்மன் கோவில் தெரு, சீலநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் வரிவசூல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
மேலும், பிப்ரவரி 25- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம் போல் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை செயல்படும். எனவே பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டியவரி மற்றும் வரியில்லா இனங்களை செலுத்தலாம். இவ்வாறு சேலம் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.



