ட்ரெண்டிங்

சேலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி !!!

 

சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர் பேரணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி கொடியசைத்து சேர்த்து துவக்கி வைத்தார்..

சேலத்தில் நவம்பர்,14 தேசிய குழந்தைகள் தினம் நவம்பர்,19 உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம் மற்றும் நவம்பர்,20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு குழந்தைகள் நலம் மற்றும் சிறப்பு சேவல் துறை மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சார்பில் இன்று குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணி திருவள்ளூர் சிலை,பழைய பேருந்து நிலையம்,காந்தி சிலை,பெரியார் சிலை,சேலம் மாநகராட்சி அலுவலகம்,வழியாக மாவட்ட ஆட்சியர் இடத்தில் நிறைவு பெற்றது. இந்த பேரணியில் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு வீதி நாடகம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது,பேரணியில் நீல நிறத்தில் உனை அணிந்து 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ,மாணவியர் ஆசிரியர்கள்,குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு மாவட்ட நிலை அலுவலர்கள்,மருத்துவத்துறை காவல்துறையினர்,சமூக நலத்துறை,பணியாளர்கள்,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள்,ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பணியாளர்கள்,மகளிர் திட்ட பணியாளர்கள்,மகளிர் சுய உதவி குழுக்கள்,அரசு அலுவலர்கள் அங்கன்வாடி பணியாளர்கள்,அனைத்து குழந்தை பராமரிப்பு நிறுவன கண்காணிப்பாளர்,பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

குழந்தைகள் தின விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாசிக்க அனைவரும் பின் தொடர்ந்து உறுதிமொழி ஏற்றனர். 

இதில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,சந்தியா, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்,காஷ்மீர்ராஜ் குழந்தை நலக்குழு தலைவர்,எழில் மற்றும் உறுப்பினர்கள் இளம் சிறார் நீதி குழு உறுப்பினர்கள்,உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகள்,மாணவர்கள் மாணவிகள்,கல்லூரி,பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.