சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் 2026 கணக்கெடுப்பு படிவத்தினை பெற்ற வாக்காளர்கள் அந்த படிவினை தாமதம் என்று பூர்த்தி செய்து வழங்கி திருத்த பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அனைத்து வாக்காளர்களிடம் கேட்டுக் கொள்வதாக,மாவட்ட தேர்தல் அலுவலரும்/மாவட்ட ஆட்சியருமான டாக்டர்,பிருந்தாதேவி கேட்டுக்கொண்டார்.
சேலம் மாவட்டத்தில் நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்பட உள்ள முதற்கட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு தூரம் சென்று அந்தந்த பாகங்களில் தற்போதைய 2025 வாக்காளர் பட்டியல் பெயர் இடமாற்றம் இருக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் தனித்தனியாக பெயர் மற்றும் புகைப்படத்தனும் அச்சிடப்பட்ட கணக்கீடு படிவங்களை வழங்கி உள்ளனர்.
கணக்கெடுப்பு படிவத்தை பெற்ற வாக்காளர்கள் அதில் இடம்பெற்றுள்ள அட்டவணைகள் தங்களது பெயர் 2002 அல்லது 2005 ஆம் ஆண்டு ( நகர்புறத் தொகுதி ) கடைசியாக நடைபெற்ற தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் இடம் பெற்றிருந்ததை voters.eci.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்து,அதனை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கையொப்பமிட்டு காலதாமதமின்றி ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
கணக்கெடுப்பு படிவத்தில் விவரத்தை பூர்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்,கிராம நிர்வாக அலுவலகம்,நகராட்சி,பேரூராட்சி அலுவலகங்கள்,வட்டாட்சியர் அலுவலகம்,வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில்,செயல்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்த உதவி மையம் மற்றும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்து, படிவங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம்,நேரடியாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி நிமித்தமாக வெளியூர் சென்று இருக்கும் வாக்காளர்கள் இணையதளம் மூலமாக தங்களது கணக்கெடுப்பு வடிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து டிசம்பர் 4ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்,மேலும் வெளிநாட்டில் பணிபுரியும் அயல்நாட்டு வாக்காளர்கள் தங்களது கணக்கிட்டு தாழ் படிவத்தினை voters.eci.gov.in என்ற முகவரியிலிருந்து தங்களது கணக்கெடுத்தால் படிவத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் எனவும் மேற்குறிப்பிட்டுள்ள கணக்கெடுப்பு படைத்தினை பூர்த்தி செய்த சமர்ப்பிக்கப்படும்,அனைத்து வாக்காளர்கள் பெயர்கள் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்து டிசம்பர் 9ஆம் தேதி அன்று வெளியிடப்படும்,எனவே தற்போது கணக்கெடுப்பு படிவத்தினை பெற்ற வாக்காளர்கள் தங்களது படிவத்தினை தாமதமின்றி பூர்த்தி செய்து வழங்கி சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அனைத்து வாக்காளர்களையும்,கேட்டுக்கொள்ளப்படுவதாக மாவட்ட தேர்தல் அலுவலரும்/மாவட்ட ஆட்சியருமான டாக்டர்,பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.


