சேலம், ஆக.13: ஆசிர்வாத் நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் கூட்டம் சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
தமிழகத்தின் முன்னணி விநியோகஸ்தர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்துக்கு ஆசிர்வாத் நிர்வாக இயக்குநர் பார்த்தா பாசு தலைமை வகித்தார். நிறுவன துணைத் தலைவர்கள் ஹரேந்திர பீஸ்ட், டாக்டர் சிரீஷ், சுதிர் போபத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிர்வாத் நிறுவன தயாரிப்புகளை சந்தைப்படுத்துவது குறித்தும், விவசாய உபகரணங்களின் சிறப்பம்சங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக, ஆசிர்வாத் காலம் பைப்புகள் 1,400 அடி ஆழம் வரை ஆழ்துளை கிணறுகளில் எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறது என்பதையும், ஆசிர்வாத் விவசாய உபகரணங்கள் எவ்வாறு விவசாயிகளுக்கு உற்றத் தோழனாக விளங்குகிறது என்பதனையும் நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.
மேலும், காரியம் உலோகமற்ற தயாரிப்பான ஆசிர்வாத் பைப்புகள் குடிநீர் விநியோகத்துக்கு உகந்தவையாக திகழ்வது குறித்தும், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளில் ஆசிர்வாத் பைப்புகள் தனி முத்திரை பதித்து வருவது குறித்தும் பெருமிதம் தெரிவித்தனர்.
இது தவிர, விவசாயிகளின் உபயோகத்துக்காக புதிய வகை பைப்புகள், பிளாட் கேபிள்கள், பிவிசி சால்வென்ட் மற்றும் புதிய ரக பிவிசி பிட்டிங்குகள் உள்ளிட்டவை கூட்டத்தில் அறிமுகத்தப்பட்டன.
முன்னதாக, கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை தென் இந்திய விற்பனை பிரிவு நிர்வாகி சண்முகம் வரவேற்றார். தமிழ்நாடு மாநில விற்பனை பிரிவு மேலாளர் ஷெரீன் அனைவருக்கும் நன்றி கூறினார்.


-SXgDfGgJfO.jpg)