ட்ரெண்டிங்

சேலத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி தொடக்கம் !!!

 

சேலத்தில் வடகிழக்கு பருவமழையை காலத்தை முன்னிட்டு, பேரிடர் மீட்பு பணிகளில் தீயணைப்பு வீரர்கள் திறமையாக செயல்படுவதற்காக சேலத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி தொடங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 15 தீயணைப்பு நிலையங்களில் இருந்து தகுதியான 19 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு சேலம் காந்தி மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் 12 சிறப்பு உயர்நிலை நீச்சல் பயிற்சி நேற்று முதல் தொடங்கியது.

இந்த பயிற்சி நிகழ்வை சேலம் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில நடத்தப்பட்டது.அரசு நீச்சல் பயிற்சியாளர் மகேந்திரன் மற்றும் அவரது குழுவினர் வீரர்களுக்கு நடைமுறை மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான நீச்சல் பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

நிகழ்வில் மாவட்ட தீ தடுப்பு குழு நிலை அலுவலர் ராஜசேகரன், ரமேஷ்பாபு, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு பயிற்சியின் மூலம், மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளம்,நீர் பெருக்கு போன்ற இயற்கை பேரிடர் நிலைகளில் மக்கள் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் மேலும் திறமையாக செயல்பட முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.