ஆன்மிகம்

ஆகமவிதிகளின்படி, திருமுறைகள் ஓதப்பட்டு நடைபெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா!

 

பிரசித்திப் பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில் சேர மன்னனர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இந்த நிலையில், கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு, ஆகமவிதிகளின்படி, திருமுறைகள் ஓதப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

 

முன்னதாக, கடந்த 1993- ஆம் ஆண்டு 81 அடி உயர ராஜகோபுரம் கட்டப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சாதி மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் கோட்டை மாரியம்மனை வணங்கி வருகின்றனர்.

 

இந்த நிலையில், மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பிரதான வழித்தடங்களில் போக்குவரத்து தடைச் செய்யப்பட்டு, வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டன.

 

மஹா கும்பாபிஷேக விழாவை பக்தர்கள் காணும் வகையில் நான்கு இடங்களில் பெரிய எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 800 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த விழாவில், அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.