ட்ரெண்டிங்

மருத்துவ மாணவியை இடமாற்றம் செய்ய ஐகோர்ட் கிளை அனுமதி! 

குமரி மருத்துவக் கல்லூரிக்கு முதுகலை மாணவியை இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 

கன்னியாகுமரியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற முதுகலை மருத்துவ மாணவி, தன்னை சேலம் தனியார் மருத்துவக் கல்லூரியில் இருந்து கன்னியாகுமரிக்கு இடமாற்றம் கோரி உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சேலம் தனியார் கல்லூரியில் உரிய கட்டணம் செலுத்த முடியவில்லை எனவும், வகுப்புகள் நடப்பதில்லை எனவும் கோரியிருந்தார். 

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுவை விசாரித்த நீதிபதிகள், மாணவி பயிலும் கல்லூரியில் அவருக்கு உகந்த சூழல் இல்லாததால் இடமாற்றம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், இடமாற்றம் செய்யப்படும் கல்லூரியில் நிர்வாகம் நிர்ணயித்த கட்டணத்தை மாணவி செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது. 

நான்கு வாரத்தில் மாணவியை இடமாற்றம் செய்ய எம்.ஜி.ஆர். பல்கலை.பதிவாளர், தேர்ச்சிக் குழு செயலருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.