ட்ரெண்டிங்

சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள் !!!

 

சேலம் ஆட்சியர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலத்தைப் போல தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டுமென கோரிக்கை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊனத்தின் தன்மையைப் பொறுத்து 6 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை மாதாந்திர உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது மேலும் தெலுங்கானா மாநிலத்தில் நான்காயிரம் ரூபாயாகவும் டெல்லியில் ஐந்தாயிரம் ரூபாயாகவும் அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் 4,800 என அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி உள்ளபோதும் தமிழகத்தில் உதவித்தொகை இதுவரை உயர்த்தாமல் இருப்பது வேதனையாக இருப்பதாகவும் ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்கள் போல மாற்றுத்திறனாளிகளின் உதவி தொகையை உயர்த்தி வழங்கிட வலியுறுத்தினார். 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் முற்றுகையிட்டு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு பின்னர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையின் பெயரில் அவர்கள் கலந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.