சேலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தினை கணக்கிட்டு படிவம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாழிகல்பட்டி,அம்பேத்கர் நகர் பகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலரும்/மாவட்ட ஆட்சியரமான டாக்டர்,பிருந்தாதேவி இன்று (நவ.08) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில் :-
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள,3264 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்,தங்களுக்கான வாக்குச்சாவடியில்,( நவ.04 ) முதல் அனைத்து,வாக்காளர்களுக்கும்,வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீடு படிவத்தை வழங்கி வருகிறார்கள்.
மேலும் தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களின்,நிரந்தர குடி பெயர்ந்த,வாக்காளர்கள்,
இறந்து போன,வாக்காளர்களின் விவரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் மூலம் அறிந்து கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும்,
வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்த கணக்கிட்டு படிவங்களைப் பெற வரும் தேதியினை முன்கூட்டியே வாக்காளர்களுக்கு தெரியப்படுத்தி அனைத்து வாக்காளர்களும் இருந்தும் கணக்கிட்டு படிவங்களை பெறுவதை உறுதி செய்திடவும் இந்த ஆய்வின்போது அதிகாரிகளுக்கு,அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ,பிருந்தாதேவி தெரிவித்தார்.


-SXgDfGgJfO.jpg)