சேலம் மாவட்டம் நல்லூரில் உள்ள டி கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பழங்குடியின இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மற்றும் வேலை வாய்ப்புக்கான பயிற்சி வழிகாட்டுதல் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில் :-
பழங்குடியினர் பெருமை தின விழா நவம்பர்,1ம் தேதி முதல் 15 ம் தேதி வரை நடத்தப்படுகிறது,அதன் ஒரு பகுதியாக இன்று தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் வகையில்,திறன் மேம்பாட்டு மற்றும் வேலை வாய்ப்புக்கான பயிற்சி வழிகாட்டுதல் முகாம் "தொல்குடி தொடு வானம்" இன்றைய தினம் நடத்தப்பட்டது. பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யும் சர்வதேச தரத்திலான பயிற்சிகளை பெற்று இளைஞர்கள் தங்களது,எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது.
மேலும் இந்த வழிகாட்டுதல் முகாமில்,சேலம்,நாமக்கல்,தர்மபுரி, கள்ளக்குறிச்சி,திருப்பூர், திருவண்ணாமலை,செங்கல்பட்டு, நீலகிரி,கோயமுத்தூர்,ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பழங்குடியின இளைஞர்கள் கலந்து கொண்டு அவர்களுக்கான,தொழில் வாய்ப்புகள் குறித்தும் பயிற்சியில் கலந்து கொள்ளும்போது அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதேபோல் இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்கும் இளைஞர்களின் தொழில் வாய்ப்புகளை பெருக்கும் வகையில் ஜெர்மன் மொழி,கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுனர் பயிற்சி, துணை சுகாதார படிப்புகள் (ALLIED HEALTH COURSES ) மற்றும் டிராக்டர் உற்பத்தி மெக்கானிக் உள்ளிட்ட மதிப்புமிக்க பயிற்சிகள் வழங்கப்பட்டது இப்ப பயிற்சியின் முடிவில் முன்னணி தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும், பழங்குடியின இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி, தொழில் வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின நலத்துறையின் இயக்குனர் அவர்களின் நேர்முக உதவியாளர் தியாகராஜன் கல்லூரி தாளாளர், பழங்குடியினர் நலத்துறையினர் திட்ட அலுவலர்கள் அரசு அதிகாரிகள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

-lyp0mwSZmh.jpeg )
-SXgDfGgJfO.jpg)