இந்தியாவிலேயே முதன்முறையாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தினை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்யும் பணியை, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி படித்த திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு உணவுகளைப் பரிமாறிய முதலமைச்சர், பின்னர் மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து, அவர்களுடன் கலந்துரையாடிவாறு உணவருந்தினார்.
அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தினை சேலம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அத்துடன், மாணவ, மாணவிகளுக்கு உணவுகளைப் பரிமாறியும், அவர்களுடன் அமர்ந்தும் உணவுகளை அருந்தினர். இந்த நிகழ்வின் போது, மாவட்டக் கல்வி அலுவலர்கள், அரசு உயரதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


