ட்ரெண்டிங்

வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த எம்.எல்.ஏ.!

 

சேலம் மாவட்டம், அரிசிப்பாளையம் பகுதியில் உள்ள 34 மற்றும் 29- வது வார்டுகளுக்கு சென்ற தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர். 

 

அதைத் தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக செய்து தருமாறும், வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளை எம்.எல்.ஏ. மற்றும் மாநகராட்சி மேயர் ஆகியோர் அறிவுறுத்தினர்.