ட்ரெண்டிங்

சேலத்தில் மழை நீர் சேமிப்பு குறித்தான விழிப்புணர்வு பேரணி !!!

 

சேலம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்,பிருந்தாதேவி,இன்று (17.10.2025) தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

மழைநீரை சேகரிப்பதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு மட்டுமல்லாமல் நிலத்தடி நீரின் தரம் மேன்மையடையும்.மேலும்,தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்கப்படுவதோடு,பொதுமக்கள் மழைநீரை வீணாக்காமல் அவர்களுடைய இல்லங்களில் சேகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தற்போது பருவமழை காலம் தொடங்குதவற்கு முன்னதாக தங்கள் வீடுகளில் உள்ள மொட்டை மாடியை சுத்தப்படுத்தியும்,மழைநீர் வடிக் குழாய்களில் அடைப்பு மற்றும் துவாரங்களை சரி செய்தும், வடிகட்டும் தொட்டிகளில் உள்ள கூழாங்கல் மற்றும் கருங்கல் ஜல்லிகளை சுத்தம் செய்து மீண்டும் நிரப்பிட வேண்டும். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காலமானது அக்டோபர் முதல் டிசம்பர் வரை இருப்பதால்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து,வீடுகள்,பள்ளிகள்,கல்லூரிகள்,அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் கட்டாயம் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் ஏற்படுத்திட வேண்டுமெனவும்,ஏற்கனவே உள்ள மழைநீர்,சேகரிப்புக்கட்டமைப்புகளை நன்றாக பராமரித்திடவும் அறிவுறித்தியுள்ளார்.

மழைநீர் சேமிப்பு பற்றிய அவசியம் மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகளின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதற்கான வழிகாட்டுதல்கள் நெறிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், எளிய முறையில் குறைந்த செலவில்,குறைந்த இடத்தில் கூட மழைநீர் எவ்வாறு சேமிப்பு செய்திடலாம் என்ற விவரங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது உள்ளது. அதே போல் இன்றையதினம் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இப்பேரணியானது மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து திருவள்ளுவர் சிலை, சேலம் மாநகராட்சி அலுவலகம் வழியாக மாவட்ட ஆட்சியரகத்தை வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து, மழைநீர் சேகரிப்பு முக்கியத்துவம் குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான குறும்படத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.பின்னர் குடிநீரின் தரத்தினை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்து பார்வையிட்டார்.இந்த நிகழ்ச்சியில்,தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப்பொறியாளர்கள் திரு.மகாதேவன், திரு.ரமேஷ் பாபு உட்பட உதவிப் பொறியாளர்கள்,கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.