சேலம் மாவட்டம் வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் கள்ளத்துப்பாக்கியை தாமாக வந்து ஒப்படைத்தால் வழக்கு பதிவு செய்யப்பட மாட்டாது என சேலம் கோட்ட வனத்துறையினர் அறிவிப்பு.
சேலம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி,நாமக்கல் வனப்போட்டத்தில் உள்ள வன உயிரினங்கள்,பறவைகள்,முயல்,காட்டுப்பன்றி,யானைகளை வேட்டையாடுவதை தடுக்க காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் மக்கள் யாரும் கள்ள துப்பாக்கி வைத்திருந்தால் வரும் 30-ம் தேதிக்குள் அந்தந்த வனச்சரக அலுவலர்கள்,காவல்துறை அதிகாரிகளிடமும,ஊர் முக்கிய பிரமுகர்களிடம்,ஒப்படைக்க வேண்டும் என சேலம் வனத்துறை கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வனத்துறை அதிகாரிகள் வனக் குற்றங்களையும் கள்ளத்துப்பாக்கால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும், வனவிலங்குகள் பற்றியும்,கிராம பகுதியில் துண்டு பிரசுரம் விநியோகித்து அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, நேரடியாக கிராமங்களுக்கு சென்ற,வனத்துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் உள்ள கள்ள துப்பாக்கி தாமாக ஒப்படைத்தால் எவ்வித வனக் குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்படாது, தாமாக வந்து ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகள் சேலம் மாவட்ட போலீஸ் ஆயுதப்படையில் ஒப்படைக்கப்படும் என வனத்தை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி வனத்தை ஒட்டி உள்ள கிராம மக்கள் தாங்கள் யாரேனும் கள்ளத் துப்பாக்கில் வைத்திருந்தால் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தி,சேலம் தர்மபுரி மாவட்ட வனச்சரதுக்கு உட்பட்ட வனத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் மும்முறமாக ஈடுபட்டு வருகின்றனர்.


