சேலம் மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் மொத்தமாக 1.44 கோடி பரிசுத்தொகையை பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 12ம் தேதி வரை நடைபெற்றது இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்கள் மாற்றுத்திறனாளிகள் பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளுக்கு மொத்தம் 54 ஆயிரத்து 157 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
சேலம் காந்தி ஸ்டேடியம்,வி எஸ் ஏ பொறியியல் கல்லூரி,நகரமலை அடிவாரம்,கோட்டை மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட இடங்களில் தடகளம்,நீச்சல், கூடைப்பந்து,வாலிபால்,கபடி,பீச் வாலிபால் போன்ற போட்டிகள் நடைபெற்றன.
இந்த மாவட்டம் முழுவதும் இருந்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர் மாவட்ட,மண்டல அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 460 வீரர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற வீரர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினர்.
இந்த போட்டி குறித்து விளையாட்டு துறை அதிகாரிகள் கூறுகையில்:-
சேலம் மாவட்ட மண்டல அளவிலான போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 460 வீரர்களுக்கும் மொத்தமாக 42.08 லட்சம் மதிப்பில் பரிசுத்தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது எனவும் தொடர்ந்து மாவட்ட மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற 880 பேர் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர் இதில் சேலம் மாவட்ட அணி ஒரு கோடியே 2 லட்சம் பரிசுத்தொகையை பெற்றுள்ளது.
மாவட்ட மண்டல மாநில அளவிலான போட்டியில் மொத்தமாக ரூ 1 கோடியே 44 லட்சத்து 8 ஆயிரம்,பரிசுத்தொகை பெற்று சேலம் மாவட்ட விளையாட்டு வீரர்கள் சாதனை புரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


-SXgDfGgJfO.jpg)