சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சுகவனேஸ்வரர் கோயில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஆகிய இடங்களுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்.... அதிநவீன கருவிகளுடன் போலீசார் தீவிர சோதனை.
சேலம் அக் 13 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் ஆகிய மூன்று இடங்களுக்கு மர்ம நபரால் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை மாவட்ட ஆட்சியர் மின்னஞ்சலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலில் 12 மணிக்கு வெடிகுண்டு வெடிக்க உள்ளதாக தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சேலம் மாநகர வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் அதிநவீன கருவிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளாகம், கார் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவு வாயிலில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட வருகின்றனர். இன்று திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் மனுநாள் என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். இதே போல சுகவனேஸ்வரர் கோவில் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பகுதியிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் சேலத்தில் உள்ள மூன்று முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் கடந்த இரண்டு மாதத்திற்குள் தொடர்ந்து 3 வந்து முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

-WQtXMlKRtS.jpeg )

-hcTFAGMRGb.jpg)