சேலம் ஆட்சியர் அலுவலத்தில் கடந்த (செப்.24) நில அளவை பிரிவில் லஞ்சம் வாங்கியதாக சேலம் நில அளவை பிரிவு தனி தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் எடப்பாடி வட்டாட்சியர் வாகனத்தின் ஓட்டுநர் வெங்கடாசலம் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
லஞ்சம் பெற்றவர்கள் கைது:-
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் மூலப்பாதை பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் பட்டா நிலத்திற்கு என்ஓசி சான்று பெற எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாகன ஓட்டுனராக உள்ள வெங்கடாசலம் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பணம் பெற்றுத்தரக் கூறிய சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் உள்ள தனி தாசில்தார் கோவிந்தராஜ், ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
சேலம் நில எடுப்பு அலுவலக தனிதாசில்தார் கோவிந்தராஜ் (47) மற்றும் அவரது ஜீப் டிரைவர் வெங்கடாஜலம் (50) ஆகியோர் ரூ.5,000 லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் உத்தரவு.


-SXgDfGgJfO.jpg)