ட்ரெண்டிங்

சேலத்தில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு !!!

 

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிள் துறை சார்பில் நாங்கள் மீட்பதற்காக சேவை செய்கிறோம் என்ற தலைப்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக சேலம் சூரமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை வளாகத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது, இதில் மண்டல அலுவலர் கல்யாண் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து சிறுவர்களும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அடுக்குமாடி குடியிருப்புகள் வீடு தொழிற்சாலை மருத்துவமனை மற்றும் காடுகளில் ஏற்படும் தீ விபத்திலிருந்து தங்களை எவ்வாறெல்லாம் தற்காத்துக் கொள்ளலாம் என்பது குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.

இதேபோன்று கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டு மயக்கம் அடைந்தவர்களை உடனடியாக மீட்பது எப்படி என்று சிறுவனை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் தீயணைப்புத் துறையில் பயன்படுத்தப்படும் நவீன கருவிகள் என்னென்ன அதன் செயல்பாடுகள் எவ்வாறு என்பது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவர்கள் பல்வேறு சந்தேகங்களை கேட்டு அறிந்தனர்,குறிப்பாக வீட்டில் குளிர்சாதன பெட்டி பழுதடைவதால் உயிர் சேதம் ஏன் ஏற்படுகிறது என்று கேட்டறிந்தனர்

இதேபோன்று காரில் ஏற்படும் தீ விபத்து காரில் ஏசியினால் மயக்கமடைந்து மரணம் ஏற்படுவது ஏன் என்பது குறித்தும் விளக்கம் கேட்டு பெற்றனர்.