ட்ரெண்டிங்

புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் ரூ.1.32 கோடிக்கு காய்கறிகள் விற்பனை !!!

 

சேலம் மாவட்டத்தில்,புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் விற்பனை களைகட்டியது.

மாவட்டத்தின் 13 உழவர் சந்தைகளில், விவசாயிகள் தங்களின் பண்ணைகளில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்தனர். மொத்தம் 321.14 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டன.

இதன் மூலம் ரூ.1.32 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், இந்த விற்பனையில் 77,197 நுகர்வோர் வாடிக்கையாளர்கள் நேரடியாக சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றதாகவும், வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புரட்டாசி மாத சனிக்கிழமைகள் வழக்கமாக அதிக வாடிக்கையாளர் வருகையையொட்டி,இந்த முறை விற்பனை கடந்த வாரங்களை விட அதிகரித்துள்ளதாகவும், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

உழவர் சந்தைகள் வழியாக விவசாயிகளுக்கு நேரடி வருமானம் கிடைப்பதுடன்,வாடிக்கையாளர்களுக்கும், குறைந்த விலையில் தரமான கிடைப்பதாக அதிகாரிகள் கூறினர்.