ட்ரெண்டிங்

சேலத்தில் பழங்குடியினர் விவசாயிகளுக்கு டிராக்டர்கள், இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி !!!

 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அவர்கள் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் தொல்குடி ஐந்திணை திட்டத்தின் கீழ் பழங்குடியினர் விவசாய சங்கங்களுக்கு வேளாண் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்ட,பிருந்தாதேவி,அவர்கள்,சேலம் மாநகராட்சி மேயர்,ஆகியோர் முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் வழங்கினார்கள்.

பின்னர,சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள் குறிப்பாக பழங்குடியின விவசாயிகள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கோடு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார்.

அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சேலம் மாவட்டம் வருகையின் போது சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் கிழக்கு பூர்வமலை பழங்குடியின விவசாயிகள் மேம்பாட்டு சங்கங்களுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படும் என அறிவித்தார்கள்,எனவும் அதன்தொடர்ச்சியாக கெங்கவல்லி வட்டம். வாழக்கோம்பை, மூக்காக்கவுண்டன் புதூர் மற்றும் சேலம் வட்டம். அடிமலைப்புதூர் ஆகிய பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் விவசாய சங்கங்களுக்கு இயந்திர தளவாட பொருட்கள் தொல்குடி திட்டத்தின் கீழ் ரூ -78.82 இலட்சம் மதிப்பீட்டில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்தொடர்ச்சியாக இன்றைய தினம், முதற்கட்டமாக மேற்படி பழங்குடியினர் விவசாய மேம்பாட்டு சங்கங்களுக்கு தற்போது 6 டிராக்டர்கள் மற்றும் 5 ரோட்டாவேட்டர்கள் இந்நிகழ்ச்சியின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் மகேந்திரா டெக் ப்ளஸ், சாப் கட்டர்,மகேந்திரா டிரேக்டர், நெல் வைக்கோல் சுருட்டும் இயந்திரம், பேட்டரி ஸ்பிரேயர்,தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம்,களை எடுக்கும் இயந்திரம்,மினி டிரேக்டர்,தீவன கலவை தாவரம் கலவை மற்றும் அரைத்தல்,பாக்குத்தட்டு தயாரிக்கும் இயந்திரங்கள்,தானியங்கள் அரைக்கும் இயந்திரம் ஆகிய இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளது,இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ள விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்,துணை மேயர்,பழங்குடியினர் நலன் (திட்ட அலுவலர்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.