"சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் விஜயதசமி வரை சிறப்பு சேர்க்கை நடைபெறும்" என அறிவிப்பு!
சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் விஜயதசமி வரை சிறப்பு சேர்க்கை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. அறிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, "தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் சேலம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் தளவாய்பட்டி ஆவின் பால் பண்ணை எதிரில் திருப்பதி கவுண்டனூர் சாலையில் இயங்கி வரும் இப்பள்ளியில் தமிழகத்தில் பாரம்பரிய கலைகளான குரலிசை (பாட்டு), தவில், நாதஸ்வரம், தேவாரம். பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பள்ளி நேரம் வார நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை ஆகும். 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள். பயிற்சி முடியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு கட்டணம் இல்லை, சேர்க்கை கட்டணமாக ஆண்டிற்கு ரூபாய் 350 மட்டும் செலுத்தப்பட வேண்டும். மாணவ, மாணவியருக்கு இலவச பேருந்து பயணச் சலுகை அளிக்கப்படுகிறது.
மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூபாய் 400 வழங்கப்படுகிறது. தமிழகத்தின் பாரம்பரிய மிக்க கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை சேலம் மாவட்டத்தினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் வருகின்ற அக்டோபர் 24- ஆம் தேதி விஜயதசமி வரை இசைப்பள்ளியில் சிறப்பு மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, தளவாய்ப்பட்டி- திருப்பதி கவுண்டனூர் சாலை, அய்யம்பெருமாம்பட்டி அஞ்சல், சேலம் - 836 302 எனும் முகவரியில் நேரிலோ அல்லது சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை இணைத்து அனுப்பியும், 0427- 2906197 மற்றும் 75026- 11005, 94435- 39772 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் பயன்பெறலாம்." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.


