ட்ரெண்டிங்

மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடத்த அறிவிப்பு வெளியீடு !!!

 

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 11.10.2025 அன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 02.10.2025 காந்தி ஜெயந்தி தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபைக்கூட்டம் நிர்வாக காரணங்களால் 11.10.2025 அன்று நடத்தப்பட உள்ளதாகவும். கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்,கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை,ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பு திட்டம் II.ஜல் ஜீவன் திட்டம்,வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல்,தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், கலைஞரின் கனவு இல்லத்திட்டம் (KKI),ஊரக வீடுகளை பழுதுபார்த்தல் திட்டம் (RRH) மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விபரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது. இக்கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாக,மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி,தெரிவித்துள்ளார்.