ட்ரெண்டிங்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு! 

மக்களவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 19) நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள இருப்பு அறையில் தேர்தல் பொதுப் பார்வையாளர் ஜி.பி.பாட்டீல் இ.ஆ.ப., மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (ஏப்ரல் 20) பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மக்களவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்றைய தினம் முடிவுற்றதை தொடர்ந்து, சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, எடப்பாடி மற்றும் ஓமலூர் ஆகிய சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் உரிய போலீஸ் பாதுகாப்புடன் சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகங்களில் சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள தனித்தனி இருப்பு அறைகளில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (ஏப்ரல் 20) பூட்டி சீல் வைக்கப்பட்டது.

சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தொடர்புடைய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள இருப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஐந்தடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. வாக்கு பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கும் வகையில் இருப்பு அறைகளுக்கு
உட்புறம் மற்றும் வெளிப்புறம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் சிசிடிவி கண்காணிப்புக் கேமிராக்கள் அமைக்கப்பட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. 

இன்றைய தினம் தேர்தல் பொதுப்பார்வையாளர் ஜி.பி. பாட்டீல் இ.ஆ.ப., மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. ஆகியோர் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கும் எண்ணும் மையத்தில் தடையில்லா மின்சார வசதி, குடிநீர் வசதி. சுகாதார வசதி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்தும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஐந்தடுக்கு போலிஸ் பாதுகாப்புடன் கண்காணிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின்போது, சீ.பாலச்சந்தர் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.ஜெகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) ஏ.சிவசுப்பிரமணியன், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் தியாகராஜன், பொறுப்பு அலுவலர் / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சேகர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.