மாநில அளவிலான சதுரங்க போட்டியை தொடங்கி வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர்,ராஜேந்திரன்.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு-2025-2026-ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை,சேலம்,நேரு கலையரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர்.மற்றும் சேலம் மாநகராட்சி மேயர்,ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் (அக்.04) தொடங்கி வைத்தார்.
பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர்,ராஜேந்திரன் அவர்கள்
தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்தும் நோக்கோடு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும்,குறிப்பாக துணை முதலமைச்சர் மாணவர்கள் இளைஞர்கள், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார்.
அந்தவகையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர்கள்,பொதுப்பிரிவினர், மாற்றுதிறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளின் கீழ்,தடகளம்,நீச்சல்,கூடைப்பந்து,வாலிபால், கபடி, மண்டல அளவிலான கடற்கரைப் கையுந்துப்பந்து உள்ளிட்ட பல்வேறு வகையிலான போட்டிகள் நடத்தப்படுகிறது.
குறிப்பாக மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கடந்த 26.08.2025 முதல் 12.09.2025 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக 2025-2026 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகளில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான செஸ்,கேரம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான கேரம் விளையாட்டுப்போட்டிகள் சேலம் நேரு கலையரங்கத்தில் இன்று தொடங்கி 13.10.2025 வரையில் நடைபெறுகிறது.
இன்றைய தினம் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டியானது 05.10.2025 வரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவியர்கள் என இரு பிரிவுகளாக பங்கேற்றுள்ளனர்.மேலும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான செஸ் போட்டிகள் 06.10.2025 முதல் 08.10.2025 வரையிலும் நடைபெறவுள்ளது.
அதேபோன்று பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக கேரம் விளையாட்டுப்போட்டிகள் 05.10.2025 முதல் 07.10.2025 வரையிலும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு 08.10.2025 முதல் 10.10.2025 வரையிலும், அரசு ஊழியர்கள் ஆண்கள், பெண்களுக்கான கேரம் விளையாட்டுப் போட்டிகள் 11.10.2025 முதல் 13.10.2025 வரையிலும் நடைபெறவுள்ளது. மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்வதாக கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.இளங்கோவன், சேலம் மாநகராட்சி துணை மேயர்,சேலம் வருவாய் கோட்டாட்சியர்,மாவட்ட விளையாட்டு அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


