ட்ரெண்டிங்

பி.எஸ்.என்.எல் வெள்ளி விழா – சேலத்தில் விழிப்புணர்வு பேரணி மற்றும் 4ஜி டவர்கள் தொடக்கம் !!!

 

சேலம்:
இந்திய தொலைத்தொடர்பு துறையில் மக்கள் சேவைக்காக கடந்த 25 ஆண்டுகளாகப் பங்களித்து வரும் பாரத சந்தார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) தனது வெள்ளி விழா (25வது ஆண்டு) கொண்டாட்டங்களை மாநிலம் முழுவதும்  நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சேலம் சீரங்கம் பாளையம் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. 

பேரணியை பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் ரவீந்திர பிரசாத் துவக்கி வைத்தார். சேலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த பேரணியில், பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, சாலை பாதுகாப்பு, பொது விழிப்புணர்வு, தொலைத்தொடர்பு சேவைகளின் பயன்பாடு குறித்து பதாகைகள் ஏந்தி சென்றனர்.

சேலம் சரகத்தில் 4ஜி டவர்கள் சேவை :-

பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பி.எஸ்.என்.எல் சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளித்த பொது மேலாளர்,
சேலம் சரகத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மொத்தம் 3,170 செல்போன் டவர்கள் உள்ளன என்றும்.
அவற்றில் 898 டவர்கள் தற்போது 4ஜி சேவைக்காக மாற்றப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

இதன் மூலம் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் விரைவான இணைய வேகம், தரமான குரல் அழைப்பு சேவைகள் மற்றும் டிஜிட்டல் வசதிகளை பெற முடியும் என்றார்.
பி.எஸ்.என்.எல் சேவைகள் விரிவாக்கம்
மேலும், பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக விலைகுறைந்த டேட்டா மற்றும் குரல் பேக் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 

கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளிலும் 4ஜி சேவைகளை விரைவில் கொண்டு சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பி.எஸ்.என்.எல் சேவைகள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

சமூக நலத்திட்டங்கள்,வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சேலம் சரகத்தில் பல்வேறு சமூக நலத்திட்டங்கள்,சுகாதார முகாம்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் பி.எஸ்.என்.எல் தனது சேவை நோக்கத்தை மக்களுக்கு ஒன்று சேர்க்கும் வகையில் உள்ளதாக தெரிவித்தார்.